About Us

எங்களை பற்றி

நமது யூனியன் அமைப்பு அனைத்து பத்திரிகையாளர்களின் “தொழிற்சங்கமாக” 1994″பதிவு 2010 ரத்து செய்யப்பட்டது மீண்டும் “2016” பதிவு செய்து தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஆணையத்தால் சான்றிதழ்
( என்3579CNI ) பெறப்பட்டது.


செய்தியாளர், ஆசிரியர்,துணை ஆசிரியர், அச்சு ஊடகம்,காட்சி ஊடகம்,புகைப்படக் கலைஞர்கள், பிரிண்டர், அச்சுத் தொழிலாளர், ஓவியர், கணினி தட்டச்சு நிபுனர், கணினி தட்டச்சு ஓவியர், கேலிச்சித்திர நிபுணர், . நூல் கற்றுணர், இணையதள காட்சி ஊடகம், இணையதள செய்தித்தாள், அச்சுப்பிழை திருத்துவர், விளம்பர நிறுவனம், ஆகியவற்றில் பணியாற்றும் அனைவரும் உறுப்பினர்கள் ஆகலாம் உழைப்புக்கேற்ற  ஊதியம் வழங்க  வேண்டும்,”ஊதியம்” இல்லாமல் யாரும் உழைக்க கூடாது,” கவர் ” கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்,கவர் மற்றும் பரிசு (கிப்ட்) கலாச்சரத்தை அனுமதித்தால் அது உழைப்பு சுரண்டலுக்கும்,ஊழலுக்கும் ஒழுக்க கேடுக்கும் வழிவகுக்கும் என்பது யூனியனின் அமைப்பின் அடிப்படை கொள்கையாகும்.

யூனியன் அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு அவரவர்  பணியாற்றும் நிறுவனங்கள் பணி நியமனத்திற்கு வழங்கிய பணி நியமன கடிதம் ( appointment order ) “அடையாள அட்டை” (identity card ) ஊதியம் வழங்கியதற்கான “ஊதிய சான்று” ( salery certificate ) ஆகியவை அவசியம் தேவை இவையனைத்தையும் பெற்ற பின்னர்,அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பின் “தகுதியானவர்கள்” உறுப்பினர்களாக  சேர்க்கப்படுவார்கள்.